Sunday, October 19, 2014

சென்னையில் மழை

வடகிழக்கு பருவக்காற்று அடைமழையுடன் அட்டகாசமாகத் தொடங்கியுள்ளது. சென்னையின் தாகம் தீர்க்க வந்த இம்மழையை ஆர்வத்துடன் வரவேற்றாலும், ஒரே நாள் தொடர் மழையில் குளம் குட்டையாகிப் போன சாலைகளைக் காணும்பொழுது மனது அயர்வடைகிறது. மழைநீர் வடிகால்/மழை நீர் சேமிப்பு எனும் பல்லாயிரம் ஆண்டு பழமையான தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்த நமது மாநகர் நிர்வாகிகளுக்கு இன்னும் எவ்வளவு ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரியவில்லை. தொடர்ந்தும் மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் நான்கு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் நகரே வெள்ளக்காடாகி முடங்கிவிடுமோ எனத் தோன்றுகிறது.

எனினும், சில்லென்று ஈரம் மிகுந்த காற்று இப்பொழுதில் ஒரு புத்துணர்வூட்டுவது மகிழ்வாகவல்லவா இருக்கிறது.

Sidewalk Conference தளம் ஒரு புதிய முயற்சி. இது ஒரு வெள்ளோட்டப் பதிவு.


1 comment:

  1. சென்னை வெயிலுக்காகவே காத்திருக்கும் நகரம் என்பது என் எண்ணம். ஒரு சிறு மலையையும் அது தாங்குவது இல்லை. வேலைக்கு போகிறவர்கள், சிறு பெரு வியாபாரிகள் அனைவரின் வசைவுகளும் வாங்கிக்கொள்கிறது இந்த சென்னை மழை. ஆனால் மழைக்காக பிராத்திக்கும் மனங்களும் உண்டு. அவர்கள் யாருமல்ல நம் பள்ளி மாணவர்கள்தான்...

    ReplyDelete