Wednesday, February 11, 2015

பிப்ரவரி 8, 2015 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை



கலந்து கொண்டவர்கள்: பெல்சன், நந்தா, நாகராஜ், ஜெயகுமார், பன்னீர் மற்றும் சுபாஷ்

கலந்து கொள்ளமுடியாமல் வருத்தப்பட்டவர்: சிவகுமார்

பெரும்பான்மை உறுப்பினர்கள் கலந்து கொண்டதால் மகிழ்ச்சி. நேரத்திற்கு வந்ததில் கூடுதல் மகிழ்ச்சி...

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விசயங்களின் தொகுப்பு...

டெல்லி தேர்தல்:
Image result for delhi election
டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பற்றியும் ஆம் ஆத்மி கட்சியின் புதிய எழுச்சி பற்றியும் அவரவர் கருத்துக்களை எடுத்துவைத்தனர். ஜெயகுமார் அவர்களது தேர்தல் களப்பணி வியூகங்கள் சிலவற்றை விவரித்தார். மேலும் இதுகுறித்து ஒரு கட்டுரை எழுதவும் ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அடுத்த வாரம் விரிவாக விவாதிக்க முடிவெடுக்கப்பட்டது.

நியூட்ரினோ ஆய்வுக்கூடம்:
தமிழகத்தின் தேனீ மாவட்டத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் பற்றி விவாதிக்கப்பட்டது. நியூட்ரினோ  பற்றி ஜெயகுமார் பகிர்ந்து கொண்ட அறிய தகவல்கள் இதோ:

> நியூட்ரினோ என்பது ஒரு அடிப்படை துகள் ( ப்ரோடான், நியுட்ரான் & எலெக்ட்ரான்  ஆகியவற்றிற்கும் ஒரு படி கீழே )
> இத்துகள் சூரியன், பூமி என அண்டவெளி எங்கும் பரவியுள்ளது 
> மிக  முக்கியமாக கதிரியக்க தன்மையற்றது 
> நியூட்ரினோ எந்த  பொருளையும் ஒடுருவ கூடியது (பூமியின் இந்தப் பக்கம் நுழைந்து அந்தப் பக்கம் வந்துவிடும். நம்மமுடியவில்லையா..? படத்தை  பாருங்கள்) 



> நியூட்ரினோ எந்த பொருளோடும், துகளோடும் வினைபுரிவதில்லை
> இதனாலேயே நியூட்ரினோ துகளை கண்டறிவது சவாலாக உள்ளது
> அது சரி. அப்புறம் ஏன் அதை ஆய்வுசெய்ய வேண்டும் என்கிறீர்களா...? அதற்கும் பதில் கொடுத்தார்
சூரியனின் மையக் கருவில் அணு இணைவு (Fusion) மூலம் உருவாகும் ஒளியானது சூரியனின் மிக அடர்த்தியான மைய விசையினால் அதன் மேற்பரப்பை அடைவதற்கு 33,000 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அதே மையக் கருவில் இருக்கும் நியூட்ரினோ துகள் சூரியனின் மேற்பரப்பை அடைவதற்கு வெறும் 8 நிமிடங்களே போதும்.  எனவே சூரியனைப் பற்றி ஆராய நியூட்ரினோவை ஆராய்வது முக்கியம். 

> தற்பொழுது ஜப்பான், நியூஸிலாந்து மற்றும் அமெரிக்காவில் இத்தகைய நியூட்ரினோ ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன

> இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் எந்த இடத்தில் நியூட்ரினோ ஆய்வுகூடம் அமைப்பது என தேடி கடைசியாக தேர்வு செய்யப் பட்ட இடம்தான் தேனீ மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதி ( முதலில் முடிவு செய்யப் பட்ட 'மசினகுடி' எதிர்ப்பினால் கைவிடப் பட்டது)

நியூட்ரினோ ஆய்வுக்கூடம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://www.ino.tifr.res.in/ino/

பீதோவன்:
Image result for beethoven
இசை உலகின் மிகபெரிய மேதையான 'பீதோவன்' பற்றிய புத்தகம் பற்றி பெல்சன் எடுத்துரைத்தார். பீதோவன் அவரது குருவாக மதித்த மொஷாட் அவர்களுக்கு எழுதிய உணர்ச்சிகரமான கடிதத்தையும் வாசித்து காட்டினார். 
மேலும் முத்துசாமி தீட்சதரின் இசை பற்றியும் எடுத்துரைத்தார். பாடியும் கட்டினார்.
பெல்சன் ரசிக்கும் இந்த மேதைகளின் இசையை எங்களுக்கும் அறிமுகப் படுத்துவார் என ஆவலுடன் எதிர்பார்கிறோம்

Riot Control: (சரியான தமிழ் வார்த்தைக்கு ஆயிரம் பொற்காசுகள்...)

பொது மக்களோ, அமைப்புகளோ போராட்டம் நடத்தும் போது காவல் துறையினர் எவ்வாறு அணுகவேண்டும். மனித உரிமைக்கு மதிப்பளிக்கும் மற்ற நாடுகளில் எப்படி இதை அணுகுகிறார்கள் என்பதி பெல்சன் விளக்கினார். இது சம்பந்தமாக நமது காவல்துறையை அணுகியபோது அவருக்கு கிடைத்த வரவேற்பையும், வெகுமதிகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நூல் அறிமுகம்: நந்தகுமார் 'பாரன்ஹீட் 451' பற்றியும், பன்னீர் 'காந்தியோடு பேசுவேன்' பற்றியும் பேசினர்.

புத்தகப் பரிமாற்றம்: மாதொருபாகன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கட்டுரைகள்

விண்ணப்பம்: வாரம் ஒரு சட்டத்தை பற்றி இக்கூட்டத்தில் விளக்கிட பெல்சன் அவர்களை கேட்டுக்கொண்டோம் 


எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும். பொருட்பிழை இருந்தால் திருத்தவும். கருத்துக்கள் விடுபட்டிருந்தால் சேர்க்கவும்...

நன்றி 

நந்தா 

Wednesday, February 4, 2015

பிப்ரவரி 1, 2015 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை


நண்பர்களுக்கு வணக்கம்,

     கடந்த ஞாயிறு (பிப்ரவரி 1) அன்று நமது கூட்டம் நடைபெற்றது. நான், நாகராஜ், ஜெயகுமார் கலந்து கொண்டோம். அனைவரும் இந்திய இராணுவத்தின் சோதனைக்குப் பிறகே கூட்ட இடத்திற்கு அனுமதிக்கப் பட்டோம்.

    நம் குழுவிற்கு ஒரு புது வரவு திரு.பெல்சன் அவர்கள். நம் குழுவின் பெயருகேற்ப ஒரு பாதசாரியாக வந்து நம் கூட்டத்தில் கலந்து கொண்டார். 'Sidewalk Conference' என்ற பெயருக்கு பலன் கிடைத்துவிட்டதாக நினைக்கிறன். திரு.பெல்சன் ஒரு வழக்கறிஞர். வரும் வாரங்களில் உங்களைப் பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளோம் பெல்சன் அவர்களே....

    சென்ற வாரம் ஜெயக்குமார் அனுப்பியிருந்த (Artificial Inteligence - http://waitbutwhy.com/2015/01/artificial-intelligence-revolution-1.html) தொடர்பான கட்டுரை பற்றி விவாதத்தை தொடங்கினோம். என்ன தான் AI வளர்ந்தாலும், வளரும் நாடுகளில் நம் வாழ்க்கை தரம் முன்னேறவில்லையே ஏன் எனவும் விவாதித்தோம். குறிப்பாக மருத்துவ துறையில் நடைபெற்றுவரும் ஆராய்ச்சிகள் பற்றி பல முக்கிய தகவல்களை ஜெயக்குமார் பகிர்ந்து கொண்டார். (ஜெயக்குமார், நீங்கள் அதை பற்றி சுருக்கமாக பகிர்ந்தால் நலம்...)

   இது தவிர மத்திய அரசின் சமீபத்திய செயல்பாடுகள் பற்றியும், டெல்லி தேர்தல் பற்றியும் சிறுது விவாதித்தோம். கூடங்குளம் அணுஉலை பற்றி விவாதம் தொடங்கியது. நேரமின்மை காரணத்தால் அதைப் பற்றி அடுத்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிப்போம். 

  எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும். பொருட்பிழை இருந்தால் திருத்தவும். கருத்துக்கள் விடுபட்டிருந்தால் சேர்க்கவும்...

நன்றி 

நந்தா