Sunday, June 21, 2015

ஜுன் 21 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை


ஜுன் 21 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை

கலந்து கொண்டவர்கள்: ஜெயகுமார், பெல்சன், நந்தகுமார், பன்னீர், நாகராஜ் மற்றும் அம்பேத்கர் ( உருவம் தான் இல்லையே தவிர அவரது கருத்துக்கள் தீர்க்கமாக ஒலிப்பதாகவே உணர்கிறேன் - நன்றி ஜெயகுமார்)

விவாதிதவை:

உலக யோகா தினத்தை முன்னிட்டு மோடி அரசு செய்து வரும் களேபரங்கள் மன்னிக்கவும் களப்பணி பற்றி விவாதித்தோம். அதில் ஒன்றும் தவறொன்றும் இல்லையென்ற கருத்தும் முன்வைக்கப்பட்ட்து. யோகவினால் ஏற்படும் நன்மைகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையா என்ற கேள்வி பதிலளிக்கப்படாமல் அந்த மரத்தடியிலேயே சுற்றிக் கொண்டுள்ளது. வரும் வாரங்களில் சிவக்குமார் ஆதரங்களை அடுக்கி அந்த மரத்தடிக்கு சுபிட்சம் அளிப்பார் என நினைக்கிறேன். பாபா ராம்தேவ் அருள்புரிவாறாக...




விவாதம் எப்பொது சாதி அமைப்பை நோக்கி திரும்பியது என்று தெரியவில்லை. ஆனால் அது வேறு எதற்கும் இடமோ நேரமோ கொடுக்காமல் முழு நேரத்தையும் எடுத்துக்கொண்டது.

இந்து மதத்தில் சாதி எவ்வாறு இயங்கியது, தற்போது இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் சாதி எவ்வாறு தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது என்பது பற்றி விரிவாக விவாதிதோம். பல மாற்றுக்கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. விவாத்திற்குப் பிறகு பின்வைக்கப்பட்டன. இங்கு தான் அம்பேத்கரின் கருத்துக்கள் முக்கியமாக அவரின் தோடக் மண்டல் உரை முக்கியத்துவம் பெறுகிறது.

அம்பேத்கரின் Annihilation of caste நூலுக்கான சுட்டி இதோ.   http://ccnmtl.columbia.edu/projects/mmt/ambedkar/web/index.html

இந்து மதம் மட்டுமின்றி கிறித்துவ இஸ்லாமிய மதங்களில் சாதி எவ்வாறு இயங்குகிறது என்பதை (தெரிந்தவரை) விவாதிதோம். இதிலிருந்து விடுபடுவது எப்படி? அது பற்றியும் விவாத்தோம். விவாதம் தொடரும் என்றே நம்புகிறேன்...

இதற்கு ”புத்தகங்கள்” தான் ஒரே வழி என்ற பன்னிர் செல்வத்தின் கருத்து கடைசி வரியில் சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது....

புத்தக அறிமுகம்:





நன்றி
நந்தா

       

Sunday, June 14, 2015

ஜுன் 14 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை


ஜுன் 14 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை

கலந்து கொண்டவர்கள்: சிவகுமார், நந்தகுமார், நாகராஜ், பெல்சன் மற்றும் ஜெயகுமார்

விவாதித்தவை:

தற்போதய மருத்துவ முறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்தும் அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டிருந்தாலும் மருத்துவர்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாதது குறித்தும் விவாதிக்கப்பட்டது.



ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பைப் பற்றி விவாதிக்கப்பட்டது. நீதியை கேலிக்கூத்தாகிய இந்தத் தீர்ப்பை எப்படி உலகமெங்கும் மக்கள் கொண்டாடினர்(!?) என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து Judicial Activism பற்றியும் இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் நீதி பரிபாலனம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Elon Musk பற்றியும் அவரின் Space-X, Tesla, Solar city  மற்றும் Power wall இன் வெற்றி பற்றியும் ஜெயகுமார் எடுத்துரைத்தார்



புத்தக அறிமுகம்:




மே 31 – ஞாயிறு கூட்ட கருத்து / காட்சிப் பேழை



மே 31 – ஞாயிறு கூட்ட கருத்து / காட்சிப் பேழை

கலந்து கொண்டவர்கள்: சுபாஷ், நந்தகுமார், சிவகுமார் மற்றும் ஆம் அவரே தான் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பன்னீர் செல்வமே தான்

விவாதித்தவை:

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் வரலாற்று சிறப்பு மிக்க(!!) தீர்ப்பு பற்றியும், அது நமக்கு சொல்லும் செய்தி பற்றியும் விவாதம் நீண்டது… 




Sunday, May 10, 2015

மே 10, ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை


மே 10, ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை

கலந்து கொண்டவர்கள்: ஜெயகுமார், நாகராஜ், நந்தகுமார் மற்றும் சிவக்குமார்

விவாதித்தவை:

சல்மான் வழக்குத் தீர்ப்பு (சமானியனுக்கு எட்டாத நீதி)

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு - தீர்ப்பு

குழந்தைகள் கல்வி, பள்ளி, கல்விமுறை, பெற்றோர் அணுகுமுறை, பதின்பருவத்தினரின் கண்ணோட்டம், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,
எப்படி அணுகுவது... சிவகுமார் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்தது சிறப்பு

அரசு பள்ளிகளைப் பற்றிய சமீபத்திய புதிய பார்வை (நம் கல்வி... நம் உரிமை!- அஜிதனும் அரசுப் பள்ளியும்)










Sunday, April 26, 2015

ஏப்ரல் 26, 2015 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை


ஏப்ரல் 26, 2015 - ஞாயிறு கூட்டம்

கலந்து கொண்டவர்கள்: ஜெயகுமார், நாகராஜ், பெல்சன், சுபாஷ் மற்றும் நந்தகுமார்
நீண்ட விடுப்பில் உள்ள உறுப்பினர்: பன்னீர் செல்வம்

விவாதிக்கப் பட்டவை:
- இந்து மதம், கிறித்துவ மற்றும் இஸ்லாம் மதத்தில் உள்ள ஜாதி அமைப்பு பற்றி (தெரிந்தவரை) விவாதித்தோம்

- இணைய சமத்துவம் (Net Neutrality) மற்றும் சமீபத்திய பிரச்சனைகள்
- மோடி மஸ்தான் அரசாங்கம் (அராஜகம்)
- ஜெயலலிதா வழக்கு விசாரணை (மருதமலை வடிவேலு காமடி)
- நீதிபதிகள் நியமன மசோதா நிலவரம்





ஏப்ரல் 12, 2015 - ஞாயிறு கூட்டம்


ஏப்ரல் 12, 2015 - ஞாயிறு கூட்டம்

பங்கேற்றவர்கள்: சுபாஷ், நாகராஜ், பெல்சன் மற்றும் நந்தகுமார்

நடைபாதை கூட்டம்-னு பேரு வச்சாலும் வச்சாங்கெ ஒரு நடைபாதையை விடமாட்டேனுறானுக...அப்புடினு நீங்க நினைக்கிறது எனக்கே கேக்குது...



ஏப்ரல் 5, 2015 - ஞாயிறு கூட்டம்


ஏப்ரல் 5, 2015 - ஞாயிறு கூட்டம்

கூட்டத்தில் பங்கெற்றவர்கள்: சிவகுமார், நாகராஜ், ஜெயகுமார் மற்றும் நந்தகுமார்




மார்ச் 8 - ஞாயிறு கூட்டம்


மார்ச் 8, 2015 - ஞாயிறு கூட்டம்

கலந்து கொண்டவர்கள்; நாகராஜ், பெல்சன், நந்தகுமார், ஜெயகுமார் மற்றும் சுபாஷ்




Saturday, March 7, 2015

மாற்றத்திற்கு பதிலாக ஏமாற்றம் தரும் ஆம் ஆத்மி கட்சி

எழுபது இடங்களில் அறுபத்து ஏழு இடங்களைப் பிடித்து தேசத்தின் கவனத்தை மட்டுமல்ல சர்வ தேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. ஆனால் அக்கட்சியின் முக்கிய வெற்றியாக நான் கருதுவது அதுவல்ல. இந்த நாட்டில் உள்ள எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடி வெள்ளியாக அது தன்னை முன்னிறுத்திக்கொண்டு அம்மக்களின் நம்பிக்கையை பெற்றதுதான் அக்கட்சியின் வெற்றி என நான் எண்ணுகிறேன். தில்லி தேர்தலில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும், இசுலாமியர்களும் மிகப் பெருவாரியாக ஆம் ஆத்மியை ஆதரித்திருந்தனர். அது தமது வாழ்வில், இந்திய அரசியலில் ஒரு உண்மையான மாற்றத்தைத் தரும் என நம்பிக்கை வைத்தனர்.

ஆனால் ஆம் ஆத்மி கட்சி சில முக்கியமான வகைகளில் ஏமாற்றத்தையே இதுவரை தந்திருக்கிறது என நினைக்கிறேன்.தூய்மையான, வன்முறையற்ற, அறவழி அரசியலையே தாம் முன்னெடுப்பதாக தொடர்ந்து அக்கட்சி பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் தேர்தலுக்கு முன் அக்கட்சி மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. சுமார் இரண்டு கோடி ரூபாய் நன்கொடை போலி நிறுவணங்களில் இருந்து அக்கட்சி பெற்றிருந்தது. அதன் பின்னணியை பற்றி விளக்க எதிர் கட்சிகளும், ஊடகங்களும் கோரிக்கை வைத்தன ஆனால் ஆம் ஆத்மி கட்சி அதுபற்றி சரியாக விளக்கம் தராமல் பிற கட்சிகளைப்போல் அந்த நன்கொடை சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்று சப்பையான பதிலையே திரும்பத் திரும்ப சொல்லிவருகிறது. கருப்புப் பணத்தை சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி உள்ளே தள்ளியிருக்கிறார்கள் என்பது தெளிவு. யார் அப்படி உள்ளே தள்ளியது என்பது தெளியும் வரை அது அரவிந்த் கேஜரிவாலின் அனுமதியுடந்தான் நடந்திருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது. 

முழுவதும் மக்களின் நன்கொடையிலேயே கட்சி நடத்துகிறோம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்பவர்கள், இப்படி பின்வாசல் வழியாக கருப்புப் பணத்தை உள்ளே கொண்டுவந்திருக்கிறார்கள் என்றால், இவர்கள் சொல்வதைப்போல் அல்லாமல் கட்டாயம் ஊழல் செய்வார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. இரண்டு கோடி பணம் தந்த அந்த பெருந்தகை பிரதி உபகாரம் எதிர்பார்க்காமலா இருப்பார்?

மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் தான் உட்கட்சி ஜன்நாயகத்தை கடைபிடிக்கப் போவதாக ஆம் ஆத்மி வாக்களித்திருந்தது. ஆனால் பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் போன்ற முன்னணித் தலைவர்கள் "உட்கட்சி ஜனநாயகம் இல்லாமல் எல்லாம் அரவிந்தின் சொல்படியே நடக்கிறது" என ஒரு நேர்மையான குற்றச்சாட்டை வைத்த பொழுது, அரவிந்தின் அடிபொடிகள் கும்பல் சேர்த்துக் கொண்டு அவ்விருவரையும் கட்சியின் முக்கிய அரசியற் செயற் குழுவிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதுபோன்ற சர்வாதிகாரப் போக்கு மக்களிடம் இருந்து பெற்ற நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்துவதன்றி வேறொன்றும் இல்லை. இன்னொரு வழியில் பார்த்தால், அரவிந்த் எப்பொழுதுமே ஒருசர்வாதிகாரத் தன்மை கொண்டவராக இருந்து மக்களிடம் ஆதரவு பெறுவதற்காக மட்டும் ஒரு போலி ஜனநாயக முகமூடியை அணிந்தவராகவே தெரியவருகிறார்.

மற்றொரு அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் போராடுவோம் என அடித்தொண்டையில் கத்திய ஆம் ஆத்மிகட்சியின் எம்மெல்யேக்களின் பின்புலத்தைப் பாருங்கள். 

32% பார்ப்பனர்கள்
12% பனியாக்கள்
13% பிற மேல்சாதியினர்
12% சீக்கியர்கள்
5% பிற்படுத்தப்பட்டவர்கள்
16% தாழ்த்தப்பட்டவர்கள்
6% இசுலாமியர்கள்

இவர்கள்தான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சமூக, பொருளாதார நீதியை தேடித்தரப்போகிறார்கள். அரவிந்த் இடஒதுக்கீட்டை ஆதரித்தது இன்னொரு தேர்தல் வெற்றிக்கான உத்திமட்டுமே என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

எப்படி பிற கட்சிகளுக்கு சாயம் வெளுத்த பின்னர் மக்களிடம் ஆதரவு குறைந்ததோ அதே போல ஆம் ஆத்மி கட்சியும் தமது தனித்துவமான கொள்கைகளை நேர்மையாக கடைபிடிக்காவிட்டால் எவ்வளவு விரைவாக அது வளர்ந்ததோ அவ்வளவு விரைவாக அது காணாமலும் போய்விடும். 

தில்லி தேர்தல் 1

தில்லி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் எழுதத் தொடங்கிய இப்பதிவு இப்பொழுதுதான் வெளிவருகிறது. ஆனால் அதற்குள் ஆம் ஆத்மி கட்சியில் ஏகப்பட்ட குளறுபடிகள். எனினும் அக்கட்சி பெற்ற வெற்றியிலிருந்து தமிழகம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்ற வகையில் இது வெளியிடப்படுகிறது.

இன்னொரு முறை ஆம் ஆத்மி கட்சி தேசத்தின் கவனத்தை தில்லியை நோக்கி திருப்பியுள்ளது. ஆம் ஆத்மியின் அசாத்திய வெற்றி பற்றி பாஜக உட்பட எல்லோருமே மெச்சுகின்றனர். சென்ற இடமெல்லாம் வெற்றிவாகை சூடிய மோதி-ஷா அணியின் தேர்தல் இயந்திரம் தில்லி தேர்தலில் மூச்சு முட்ட போராடத்தள்ளப்பட்டது, மோதியின் எதிர்ப்பாளர்களுக்கு உவப்பளித்திருக்க வேண்டும். இரண்டே ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட, முந்தைய தேர்தலில் மண்ணைக் கவ்விய ஒரு கட்சி, மிகக் குறைந்த பண பலத்தில் எப்படி சக்தி மிகுந்த மோதி-ஷா இயந்திரத்திற்கு இப்படி ஒரு வியக்கத்தக்க போட்டியைத் தந்தது? தேர்தல் என்பது ஓட்டின் விலை ஆயிரமா? ஐயாயிரமா? எனும் அளவிற்கு குறுகிப்போன தமிழகத்திற்கு இதில் ஏதும் பாடமிருக்கிறதா?

சந்தேகத்திற்கு இடமில்லாமல் இது ஒரு மாற்று அரசியல், அதிலும் அதிகாரத்தை கைப்பற்ற திறனுள்ள மாற்று அரசியல் என்பது ஒரு முறையல்ல இரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது. இது இந்தியா முழுவதின் கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது, எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கிய காரணம் அப்படி ஒரு கட்சிக்கான தேவை.

மிகுந்திருக்கும் வன்முறை, பணபலம், அதனால் வளரும் ஊழல் என தற்போதைய அரசியல் வெளி வர இயலாத புதைகுழியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் பணபலமின்றி, வன்முறையின் துணையின்றி தேர்தலை வெற்றி பெருவது இதுவரை ஒரு சாத்தியமில்லாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. மக்களின் நலன் சார்ந்த, தூய்மையன அரசியிலின் தேவையை எல்லோரும் உணர்ந்திருந்தாலும் எந்த பிரதான அரசியல் கட்சியும் அதை முன்னெடுக்காததால், வாக்காளர்கள் இருப்பதில் அவர்களுக்கு பிடித்த ஒரு ஊழல்வாத கட்சியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கத் தள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆட்சிக்குப் பிறகும் தூய்மையான அரசியலின் தேவை அதிகரித்துக் கொண்டே சொல்கிறது ஆனால் அதை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. இச்சூழ்நிலையில்தான் ஒரு பிரதான கட்சி தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் பொழுது, கொள்கை நிலைப்பாட்டையும் தாண்டி மக்கள் பெருவாரியான ஆதரவைத் தந்திருக்கிறார்கள்.

ஆனால் எப்படி இரண்டாண்டிற்கு முன் தொடங்கப்பட்ட ஒரு கட்சி ஒரு முக்கியமான, ஆட்சியை கைப்பற்றும் திறனுள்ள ஒரு கட்சியாக தன்னை மக்களிடம் முன்வைத்தது? இதற்கு அடிப்படையான சிலகூறுகளில் ஒன்று மக்களின் ஆதரவைப் பெறத்தக்க ஒரு எளிமையான செய்தி. இன்னொன்றுஅதை முன்னெடுக்கும் நம்பகத்தன்மைமிக்க தலைமை.கடைசியாக இவ்விரண்டையும் மக்களிடம் எடுத்துச் செல்ல ஒரு தொண்டர்படை. ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கெதிரான இந்தியா அமைப்பில் இருந்து பிறந்ததால் இந்த மூன்றுமே தொடக்கத்திலேயே ஓரளவிற்கு கட்சியில் இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களை சளைக்காமல் சந்த்தித்தன் மூலம் இம்மூன்று கூறுகளும் கூர்மையும் பலமும் பெற்று கட்சியை வரலாற்றில் இடம்பெறத்தக்க ஒரு வெற்றிக்கு இட்டுச்சென்றிருக்கின்றன. 

ஊழல் எதிர்ப்பு என்பது எல்லா நாடுகளிலும் எல்லா சமயங்களிலும் செல்லுபடியாகம் ஒரு அரசியல் கொள்கைதான். ஊழல் மலிந்திருக்கிறது என்பதை எல்லா நிலையில் உள்ள மக்களும் அன்றாட வாழ்வில் உணர்ந்திருக்கிறார்கள்.  ஒரு ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் தேவை தற்சமயம் அதிகமாகவே இருக்கிறது. எனவே ஆம் ஆத்மி கட்சி ”ஊழலை ஒழிப்போம் அதனால் விரயங்கள் தடுக்கப்பட்டு மக்களின் அத்யாவசிய தேவைகளான, கல்வி, மருத்துவம், மின்சாரம் போன்ற அடிப்படையான விசயங்களை மேம்படுத்துவோம்.” என்ற மிக எளிமையான கருத்தை முன்வைத்தது.

இந்த கருத்துக்களை முன்வைத்து பல கட்சிகள் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றன. ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கேஜ்ரிவாலின் மீதிருக்கும் ”நேர்மையாளர்,பல ஆண்டுகளாக மக்களுக்காக போராடி வருபவர்” என்ற பட்டம், ஆம் ஆத்மி கட்சியின் எளிமையான ஊழல் ஒழிப்பு கொள்கைக்கு அதீத வழு சேர்க்கிறது.  அரவிந்தின்  தலைமைப்பண்பின் முக்கிய பங்களிப்பானது நாடு முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை தமது கொள்கைகளை நம்ப வைத்து, ஊக்கமளித்து தமது கட்சியில் சேர்த்ததுதான்.

ஊழல் ஒழிப்பு கொள்கையின் பின்னிருக்க வேண்டிய முக்கிய விசயம் கட்சிக்குத் தேவையான நிதியை பொது மக்களிடம் இருந்து வெளிப்படையாக பெறுதல். பிற கட்சிகள் ஊழல் செய்த பணத்தில் ஒரு பங்கையோ அல்லது ஊழல் முதலாளிகளின் நன்கொடைகளையோ தான் தேர்தல் செலவிற்கு நம்பியிருக்கின்றன. எனவே, அவர்கள் ஊழலை ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது.மக்களிடம் நேரடியாக தேர்தல் நிதி பெறுதல் என்பது சிரமமான வேலை மேலும் எவ்வளவு முயன்றாலும் பெருஞ்செல்வத்தை நன்கொடையாக ஈட்ட இயலாது. எனவே  கட்சியின் தலைமையை பற்றியும், கொள்கையை பற்றியும்  மக்களுக்கு எடுத்துச் செல்ல தந்திரமான பிரச்சார உத்திகளை கட்சி கையாள வேண்டும். மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் குறைந்த நிதியே கையிலிருப்பதால் தேர்தல் பிரச்சாரம் சிக்கனமாகச் செய்யப்படவேண்டும். ஊடகங்களின் ஒத்தாசை வேண்டும். இங்குதான் தன்னலமற்ற தொண்டர் படை அவசியமாகிறது.

அரவிந்த் கேஜ்ரிவாலின் தலைமையை நம்பி நாடு முழுவதிலும் இருந்து பல தன்னார்வலர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்கள். பாரதிய ஜனதா அளவிற்கு பெரிய ஆள் பலம் இல்லாவிட்டாலும், ஆம் ஆத்மி கட்சியின் தன்னார்வலர்கள் தமது ஆர்வத்தாலும், ஊக்கத்தாலும் கட்சியின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களித்திருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியை முதன்மை ஊடகங்கள் அதிகமாகக் கண்டுகொள்ளவில்லை. அப்பொழுது சமூக வலைத்தளங்களில் தன்னார்வலர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்ததனர். கட்சியின் செயல்பாடுகளை முதன்மை ஊடகங்கள் புறக்கணிக்கின்றன எனவும், அவை பாரதிய ஜனதாவிற்கு சாதகமாக செயல்படுகின்றன என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை பற்றியும் அவற்றை பேச வைத்தனர். தன்னார்வலர்களின் பணி வலையுலகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஏராளமான் தெரு முனைக் கூட்டங்களை நடத்தினார்கள். 




தன்னார்வலர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால், ஆடல், பாடல், தெருக்கூத்து என அவர்களது பிரச்சாரம் புதுமையாகவும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகவும் அமைந்தது. இத்தனைக்கும் பிரதான தன்னார்வலர்களின் எண்ணிக்கை வெறும் 30,000ம் தான். அதைப்போல ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியை முன்னிறுத்தி அசத்திய சமூக வலைத்தளக் குழுவின் பிரதான உறுப்பினர்கள் 10லிருந்து 20 பேர்தான். 100 இளைஞர்களைக் கொடுத்தால் இந்த நாட்டை மாற்றிக் காட்டுவேன் என ஒரு பெரியவர் சொல்லிச் சென்றார். அரவிந்த் அதை செய்து காட்டியிருக்கிறார்.


Wednesday, February 11, 2015

பிப்ரவரி 8, 2015 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை



கலந்து கொண்டவர்கள்: பெல்சன், நந்தா, நாகராஜ், ஜெயகுமார், பன்னீர் மற்றும் சுபாஷ்

கலந்து கொள்ளமுடியாமல் வருத்தப்பட்டவர்: சிவகுமார்

பெரும்பான்மை உறுப்பினர்கள் கலந்து கொண்டதால் மகிழ்ச்சி. நேரத்திற்கு வந்ததில் கூடுதல் மகிழ்ச்சி...

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விசயங்களின் தொகுப்பு...

டெல்லி தேர்தல்:
Image result for delhi election
டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பற்றியும் ஆம் ஆத்மி கட்சியின் புதிய எழுச்சி பற்றியும் அவரவர் கருத்துக்களை எடுத்துவைத்தனர். ஜெயகுமார் அவர்களது தேர்தல் களப்பணி வியூகங்கள் சிலவற்றை விவரித்தார். மேலும் இதுகுறித்து ஒரு கட்டுரை எழுதவும் ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அடுத்த வாரம் விரிவாக விவாதிக்க முடிவெடுக்கப்பட்டது.

நியூட்ரினோ ஆய்வுக்கூடம்:
தமிழகத்தின் தேனீ மாவட்டத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் பற்றி விவாதிக்கப்பட்டது. நியூட்ரினோ  பற்றி ஜெயகுமார் பகிர்ந்து கொண்ட அறிய தகவல்கள் இதோ:

> நியூட்ரினோ என்பது ஒரு அடிப்படை துகள் ( ப்ரோடான், நியுட்ரான் & எலெக்ட்ரான்  ஆகியவற்றிற்கும் ஒரு படி கீழே )
> இத்துகள் சூரியன், பூமி என அண்டவெளி எங்கும் பரவியுள்ளது 
> மிக  முக்கியமாக கதிரியக்க தன்மையற்றது 
> நியூட்ரினோ எந்த  பொருளையும் ஒடுருவ கூடியது (பூமியின் இந்தப் பக்கம் நுழைந்து அந்தப் பக்கம் வந்துவிடும். நம்மமுடியவில்லையா..? படத்தை  பாருங்கள்) 



> நியூட்ரினோ எந்த பொருளோடும், துகளோடும் வினைபுரிவதில்லை
> இதனாலேயே நியூட்ரினோ துகளை கண்டறிவது சவாலாக உள்ளது
> அது சரி. அப்புறம் ஏன் அதை ஆய்வுசெய்ய வேண்டும் என்கிறீர்களா...? அதற்கும் பதில் கொடுத்தார்
சூரியனின் மையக் கருவில் அணு இணைவு (Fusion) மூலம் உருவாகும் ஒளியானது சூரியனின் மிக அடர்த்தியான மைய விசையினால் அதன் மேற்பரப்பை அடைவதற்கு 33,000 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அதே மையக் கருவில் இருக்கும் நியூட்ரினோ துகள் சூரியனின் மேற்பரப்பை அடைவதற்கு வெறும் 8 நிமிடங்களே போதும்.  எனவே சூரியனைப் பற்றி ஆராய நியூட்ரினோவை ஆராய்வது முக்கியம். 

> தற்பொழுது ஜப்பான், நியூஸிலாந்து மற்றும் அமெரிக்காவில் இத்தகைய நியூட்ரினோ ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன

> இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் எந்த இடத்தில் நியூட்ரினோ ஆய்வுகூடம் அமைப்பது என தேடி கடைசியாக தேர்வு செய்யப் பட்ட இடம்தான் தேனீ மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதி ( முதலில் முடிவு செய்யப் பட்ட 'மசினகுடி' எதிர்ப்பினால் கைவிடப் பட்டது)

நியூட்ரினோ ஆய்வுக்கூடம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://www.ino.tifr.res.in/ino/

பீதோவன்:
Image result for beethoven
இசை உலகின் மிகபெரிய மேதையான 'பீதோவன்' பற்றிய புத்தகம் பற்றி பெல்சன் எடுத்துரைத்தார். பீதோவன் அவரது குருவாக மதித்த மொஷாட் அவர்களுக்கு எழுதிய உணர்ச்சிகரமான கடிதத்தையும் வாசித்து காட்டினார். 
மேலும் முத்துசாமி தீட்சதரின் இசை பற்றியும் எடுத்துரைத்தார். பாடியும் கட்டினார்.
பெல்சன் ரசிக்கும் இந்த மேதைகளின் இசையை எங்களுக்கும் அறிமுகப் படுத்துவார் என ஆவலுடன் எதிர்பார்கிறோம்

Riot Control: (சரியான தமிழ் வார்த்தைக்கு ஆயிரம் பொற்காசுகள்...)

பொது மக்களோ, அமைப்புகளோ போராட்டம் நடத்தும் போது காவல் துறையினர் எவ்வாறு அணுகவேண்டும். மனித உரிமைக்கு மதிப்பளிக்கும் மற்ற நாடுகளில் எப்படி இதை அணுகுகிறார்கள் என்பதி பெல்சன் விளக்கினார். இது சம்பந்தமாக நமது காவல்துறையை அணுகியபோது அவருக்கு கிடைத்த வரவேற்பையும், வெகுமதிகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நூல் அறிமுகம்: நந்தகுமார் 'பாரன்ஹீட் 451' பற்றியும், பன்னீர் 'காந்தியோடு பேசுவேன்' பற்றியும் பேசினர்.

புத்தகப் பரிமாற்றம்: மாதொருபாகன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கட்டுரைகள்

விண்ணப்பம்: வாரம் ஒரு சட்டத்தை பற்றி இக்கூட்டத்தில் விளக்கிட பெல்சன் அவர்களை கேட்டுக்கொண்டோம் 


எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும். பொருட்பிழை இருந்தால் திருத்தவும். கருத்துக்கள் விடுபட்டிருந்தால் சேர்க்கவும்...

நன்றி 

நந்தா 

Wednesday, February 4, 2015

பிப்ரவரி 1, 2015 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை


நண்பர்களுக்கு வணக்கம்,

     கடந்த ஞாயிறு (பிப்ரவரி 1) அன்று நமது கூட்டம் நடைபெற்றது. நான், நாகராஜ், ஜெயகுமார் கலந்து கொண்டோம். அனைவரும் இந்திய இராணுவத்தின் சோதனைக்குப் பிறகே கூட்ட இடத்திற்கு அனுமதிக்கப் பட்டோம்.

    நம் குழுவிற்கு ஒரு புது வரவு திரு.பெல்சன் அவர்கள். நம் குழுவின் பெயருகேற்ப ஒரு பாதசாரியாக வந்து நம் கூட்டத்தில் கலந்து கொண்டார். 'Sidewalk Conference' என்ற பெயருக்கு பலன் கிடைத்துவிட்டதாக நினைக்கிறன். திரு.பெல்சன் ஒரு வழக்கறிஞர். வரும் வாரங்களில் உங்களைப் பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளோம் பெல்சன் அவர்களே....

    சென்ற வாரம் ஜெயக்குமார் அனுப்பியிருந்த (Artificial Inteligence - http://waitbutwhy.com/2015/01/artificial-intelligence-revolution-1.html) தொடர்பான கட்டுரை பற்றி விவாதத்தை தொடங்கினோம். என்ன தான் AI வளர்ந்தாலும், வளரும் நாடுகளில் நம் வாழ்க்கை தரம் முன்னேறவில்லையே ஏன் எனவும் விவாதித்தோம். குறிப்பாக மருத்துவ துறையில் நடைபெற்றுவரும் ஆராய்ச்சிகள் பற்றி பல முக்கிய தகவல்களை ஜெயக்குமார் பகிர்ந்து கொண்டார். (ஜெயக்குமார், நீங்கள் அதை பற்றி சுருக்கமாக பகிர்ந்தால் நலம்...)

   இது தவிர மத்திய அரசின் சமீபத்திய செயல்பாடுகள் பற்றியும், டெல்லி தேர்தல் பற்றியும் சிறுது விவாதித்தோம். கூடங்குளம் அணுஉலை பற்றி விவாதம் தொடங்கியது. நேரமின்மை காரணத்தால் அதைப் பற்றி அடுத்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிப்போம். 

  எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும். பொருட்பிழை இருந்தால் திருத்தவும். கருத்துக்கள் விடுபட்டிருந்தால் சேர்க்கவும்...

நன்றி 

நந்தா  

Friday, January 2, 2015

வளர்ச்சி

மோதி மிகப்பெரிய வெற்றியை பெற்று பிரதமராகி இன்னும் ஓராண்டு முடியவில்லை. ஆனால் சங்கப் பரிவாரங்களின் அட்டகாசங்கள் வேகமாக பரவி வருகின்றன. வளர்ச்சியை முன்னிறுத்தி மோதி பிரச்சாரம் செய்தாலும் ஆட்சி அதிகாரத்தை பெருவதற்கு அது ஒரு சாக்கு மட்டுமே என்றும் பாஜகவின் முக்கிய நோக்கம் இந்துத்வாதான் என சிலர் இதை எதிர்பார்த்தே இருந்தோம். ஆனால் இவ்வளவு சீக்கிரத்திலேயே வளர்ச்சியை பின் தள்ளிவிட்டு இந்துத்துவா கொள்கைகளை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.

 இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லாம் இந்துக்கள் என்றும், தமது உடமைகள் என்றும் RSS தலைவர் சொல்கிறார். சமஸ்கிருதத்தையும், இந்தியையும் உள்ளே திணிக்க எல்லா உத்திகளையும் உள்துறை, மனித வளத்துறை, வெளியுறவுத்துறை மற்றும் பிற அமைச்சகங்கள் கையாள்கின்றன. கிறிஸ்தவ சிறுபான்மையினரின் முக்கிய மத விழா நாளை சப்பைக்காரணம் சொல்லி ஆக்கிரமிக்கிறார்கள். மதக்கலவரங்களை தூண்டும்படியாக பல சமூக விரோத செயல் புரிகிறார்கள், பொய் புரட்டுகளை அவிழ்த்து விடுகிறார்கள். பெரும்பான்மை இந்தியர்களுக்கு சூத்திரப்பட்டம் கட்டி வர்ணாசிரம அநீதியை நிலை நாட்டும் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என முக்கிய பொருப்பிலிருக்கும் அமைச்சர் கூறுகிறார். பாஜகவை ஆதரிக்காதவர்கள் எல்லாம் தவறான வழியில் பிறந்தவர்கள் என்கிறார் இன்னொரு அமைச்சர். பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் விமானங்கள், அணுகுண்டு, ப்ளாஸ்டிக் சர்ஜரி போன்றவை இருந்தன என பிரதம மந்திரியே புருடா விடுகிறார்.

தாய் மதத்திற்கு அழைக்கிறோம் எனக்கூறிக்கொண்டு இந்து மத அநீதியில் இருந்து தப்பிய அப்பாவி மக்களை ஏமாற்றி மத அரசியல் செய்கிறார்கள். போலிச்சாமியார்களைப் பற்றி படமெடுத்து வெளியிட்டால் திரையரங்குகளை அடித்து நொறுக்குகிறார்கள்.

என்னப்பா வளர்ச்சி வளர்ச்சி எனக் கூவிக் கூவி மோதியை விற்றீர்களே இதுதானா அந்த வளர்ச்சி?