Wednesday, February 4, 2015

பிப்ரவரி 1, 2015 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை


நண்பர்களுக்கு வணக்கம்,

     கடந்த ஞாயிறு (பிப்ரவரி 1) அன்று நமது கூட்டம் நடைபெற்றது. நான், நாகராஜ், ஜெயகுமார் கலந்து கொண்டோம். அனைவரும் இந்திய இராணுவத்தின் சோதனைக்குப் பிறகே கூட்ட இடத்திற்கு அனுமதிக்கப் பட்டோம்.

    நம் குழுவிற்கு ஒரு புது வரவு திரு.பெல்சன் அவர்கள். நம் குழுவின் பெயருகேற்ப ஒரு பாதசாரியாக வந்து நம் கூட்டத்தில் கலந்து கொண்டார். 'Sidewalk Conference' என்ற பெயருக்கு பலன் கிடைத்துவிட்டதாக நினைக்கிறன். திரு.பெல்சன் ஒரு வழக்கறிஞர். வரும் வாரங்களில் உங்களைப் பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளோம் பெல்சன் அவர்களே....

    சென்ற வாரம் ஜெயக்குமார் அனுப்பியிருந்த (Artificial Inteligence - http://waitbutwhy.com/2015/01/artificial-intelligence-revolution-1.html) தொடர்பான கட்டுரை பற்றி விவாதத்தை தொடங்கினோம். என்ன தான் AI வளர்ந்தாலும், வளரும் நாடுகளில் நம் வாழ்க்கை தரம் முன்னேறவில்லையே ஏன் எனவும் விவாதித்தோம். குறிப்பாக மருத்துவ துறையில் நடைபெற்றுவரும் ஆராய்ச்சிகள் பற்றி பல முக்கிய தகவல்களை ஜெயக்குமார் பகிர்ந்து கொண்டார். (ஜெயக்குமார், நீங்கள் அதை பற்றி சுருக்கமாக பகிர்ந்தால் நலம்...)

   இது தவிர மத்திய அரசின் சமீபத்திய செயல்பாடுகள் பற்றியும், டெல்லி தேர்தல் பற்றியும் சிறுது விவாதித்தோம். கூடங்குளம் அணுஉலை பற்றி விவாதம் தொடங்கியது. நேரமின்மை காரணத்தால் அதைப் பற்றி அடுத்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிப்போம். 

  எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும். பொருட்பிழை இருந்தால் திருத்தவும். கருத்துக்கள் விடுபட்டிருந்தால் சேர்க்கவும்...

நன்றி 

நந்தா  

1 comment:

  1. மிக்க நன்றி நந்தா.

    செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் பற்றி சில தகவல்களையும் சுட்டிகளையும் சேகரித்து ஓரிரு நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete