Sunday, June 21, 2015

ஜுன் 21 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை


ஜுன் 21 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை

கலந்து கொண்டவர்கள்: ஜெயகுமார், பெல்சன், நந்தகுமார், பன்னீர், நாகராஜ் மற்றும் அம்பேத்கர் ( உருவம் தான் இல்லையே தவிர அவரது கருத்துக்கள் தீர்க்கமாக ஒலிப்பதாகவே உணர்கிறேன் - நன்றி ஜெயகுமார்)

விவாதிதவை:

உலக யோகா தினத்தை முன்னிட்டு மோடி அரசு செய்து வரும் களேபரங்கள் மன்னிக்கவும் களப்பணி பற்றி விவாதித்தோம். அதில் ஒன்றும் தவறொன்றும் இல்லையென்ற கருத்தும் முன்வைக்கப்பட்ட்து. யோகவினால் ஏற்படும் நன்மைகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையா என்ற கேள்வி பதிலளிக்கப்படாமல் அந்த மரத்தடியிலேயே சுற்றிக் கொண்டுள்ளது. வரும் வாரங்களில் சிவக்குமார் ஆதரங்களை அடுக்கி அந்த மரத்தடிக்கு சுபிட்சம் அளிப்பார் என நினைக்கிறேன். பாபா ராம்தேவ் அருள்புரிவாறாக...




விவாதம் எப்பொது சாதி அமைப்பை நோக்கி திரும்பியது என்று தெரியவில்லை. ஆனால் அது வேறு எதற்கும் இடமோ நேரமோ கொடுக்காமல் முழு நேரத்தையும் எடுத்துக்கொண்டது.

இந்து மதத்தில் சாதி எவ்வாறு இயங்கியது, தற்போது இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் சாதி எவ்வாறு தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது என்பது பற்றி விரிவாக விவாதிதோம். பல மாற்றுக்கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. விவாத்திற்குப் பிறகு பின்வைக்கப்பட்டன. இங்கு தான் அம்பேத்கரின் கருத்துக்கள் முக்கியமாக அவரின் தோடக் மண்டல் உரை முக்கியத்துவம் பெறுகிறது.

அம்பேத்கரின் Annihilation of caste நூலுக்கான சுட்டி இதோ.   http://ccnmtl.columbia.edu/projects/mmt/ambedkar/web/index.html

இந்து மதம் மட்டுமின்றி கிறித்துவ இஸ்லாமிய மதங்களில் சாதி எவ்வாறு இயங்குகிறது என்பதை (தெரிந்தவரை) விவாதிதோம். இதிலிருந்து விடுபடுவது எப்படி? அது பற்றியும் விவாத்தோம். விவாதம் தொடரும் என்றே நம்புகிறேன்...

இதற்கு ”புத்தகங்கள்” தான் ஒரே வழி என்ற பன்னிர் செல்வத்தின் கருத்து கடைசி வரியில் சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது....

புத்தக அறிமுகம்:





நன்றி
நந்தா

       

Sunday, June 14, 2015

ஜுன் 14 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை


ஜுன் 14 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை

கலந்து கொண்டவர்கள்: சிவகுமார், நந்தகுமார், நாகராஜ், பெல்சன் மற்றும் ஜெயகுமார்

விவாதித்தவை:

தற்போதய மருத்துவ முறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்தும் அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டிருந்தாலும் மருத்துவர்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாதது குறித்தும் விவாதிக்கப்பட்டது.



ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பைப் பற்றி விவாதிக்கப்பட்டது. நீதியை கேலிக்கூத்தாகிய இந்தத் தீர்ப்பை எப்படி உலகமெங்கும் மக்கள் கொண்டாடினர்(!?) என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து Judicial Activism பற்றியும் இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் நீதி பரிபாலனம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Elon Musk பற்றியும் அவரின் Space-X, Tesla, Solar city  மற்றும் Power wall இன் வெற்றி பற்றியும் ஜெயகுமார் எடுத்துரைத்தார்



புத்தக அறிமுகம்:




மே 31 – ஞாயிறு கூட்ட கருத்து / காட்சிப் பேழை



மே 31 – ஞாயிறு கூட்ட கருத்து / காட்சிப் பேழை

கலந்து கொண்டவர்கள்: சுபாஷ், நந்தகுமார், சிவகுமார் மற்றும் ஆம் அவரே தான் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பன்னீர் செல்வமே தான்

விவாதித்தவை:

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் வரலாற்று சிறப்பு மிக்க(!!) தீர்ப்பு பற்றியும், அது நமக்கு சொல்லும் செய்தி பற்றியும் விவாதம் நீண்டது…